பாலிவுட்டில், கடந்த 1956ஆம் ஆண்டு வெளியான ’சிஐடி’ திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமானவர் பானு அத்தையா. அதைத்தொடர்ந்து இவர் இந்தியில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான ’காந்தி’ படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருத்தை பானு அத்தையா தட்டிச் சென்றார்.
இந்தநிலையில், பானு அத்தையா நேற்று (அக்.15) மூளைக் கட்டி (brain cancer) காரணமாக மும்பையில் உயிரிழந்தார். இச்செய்தியை அவரது மகள் ராதிகா குப்தா அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இவர், முன்று ஆண்டுகளாக முடக்குவாதத்தால் செயல்பட முடியாமல் படுக்கையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் பல விருதுகளை தட்டிச்சென்ற பானு அத்தையாவின் மறைவு திரையுலகில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: இனத்துரோகி வேடத்தில் இனப்பற்றாளரா? - ’800’க்கு வலுக்கும் எதிர்ப்பு!