ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் 10ஆவது இந்திய திரைப்பட விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவானது ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதிவரை நடக்க இருக்கிறது. இதில், கலந்துகொள்ள பாலிவுட் பிரபலங்கள் நடிகர் ஷாருக்கான், அர்ஜூன் கபூர், நடிகை தபு, இயக்குநர் கரண் ஜோகர், ஸ்ரீராம் ராகவன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதே போல் தமிழ் சினிமா துறையில் இருந்து இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா, நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. அதேபோல் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பாக ஷாருக்கான், தபு , விஜய் சேதுபதி, கயத்திரி, அர்ஜூன் கபூர் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது .