ETV Bharat / sitara

#HBD தமன்னா - அழகு பதுமையின் பிறந்தநாள் இன்று - Tamanna birthday special

திரைத்துறையில் வெற்றி வாகை சூடி வரும் நடிகை தமன்னா இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

#HBD தமன்னா
#HBD தமன்னா
author img

By

Published : Dec 21, 2021, 7:44 AM IST

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் 'கேடி' படம் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 'கல்லூரி' படத்தில் கதையின் நாயகியாக பயணத்தைத் தொடங்கினார்.

இவர், 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பிறந்த இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு வெளியான் ‘சந்த் சா ரோஷன் செகரா’ என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் 'கேடி' படம் மூலம் அறிமுகமான இவர் நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா,அஜித் உடன் வீரம் ஆகிய முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

HBD தமன்னா
HBD தமன்னா

கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.இஞ்சி இடுப்பழகி, நண்பேன்டா படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

HBD தமன்னா
HBD தமன்னா

பாகுபலியின் வெற்றி

ராஜமவுளி இயக்கத்தில் பாகுபலி படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. சீனாவிலும் அப்படம் வெளியானது. பாகுபலியின் வெற்றியைத் தொடர்ந்து தமன்னாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

போலா சங்கர்’
போலா சங்கர்’

இதையடுத்து, ரவி தேஜாவுடன் பெங்கால் டைகர் படத்தில் நடித்தார். ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு குரும்படத்தில் நடித்தார். நடிகர் கார்த்தியுடன் நடித்த தோழா படம் நல்ல வரவேற்பை பெற்றது. தேவி படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்த படமும் வெற்றியடைந்தது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி ஜோடியாக நடித்த தர்மதுரை படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்து.

நடிகை தமன்னா
நடிகை தமன்னா

வெப் சீரிஸில் தமன்னா

டிஜிட்டல் தளத்தில் கதைகள் பலவும் சிறப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பல முன்னணி திரைப்பிரபலங்களும் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். தமிழிலும் திறமை வாய்ந்த நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வத்துடன் முன் வருகின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் '11th Hour', நவம்பர் ஸ்டோரி போன்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

HBD தமன்னா
HBD தமன்னா

இவர் நடித்த அடுத்த அடுத்த படங்களில் வெற்றி வாகை சூடிக்கொண்டே வந்தார். தற்போது இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் ’போலா சங்கர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அழகு பதுமை
அழகு பதுமை

இதில், அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியும், ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடிக்கின்றனர். இப்படி திரைத்துறையில் வெற்றி வாகை சூடிவரும் தமன்னா இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.#HBD தமன்னா

இதையும் படிங்க : ஒலிம்பிக்கிற்குத் தயாராகிவரும் மகனுக்காக குடும்பத்துடன் துபாய் சென்ற மாதவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.