ETV Bharat / sitara

உயிர் பிழைத்தேன் என்ற உணர்வைவிட அவர்கள் உயிரிழந்துவிட்டார்களே என்று வேதனை - ஷங்கர்

"விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும் கஷ்டங்களையும் பார்க்கும்போது, அந்தக் கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது"

Shankar
Shankar
author img

By

Published : Feb 28, 2020, 7:42 PM IST

'இந்தியன் 2' பட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயை அளிக்கவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் சில நாள்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டது. இதில் படப்பிடிப்பில் இருந்த மூன்று நபர்கள் உயிரிழந்தனர். திரைத்துறையில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. படக்குழுவைச் சேர்ந்தவர்கள் பலரும் உயிரிழந்தோருக்குத் தங்களது இரங்கலை தெரிவித்துவந்தனர்.

விபத்தையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது இரங்கலை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில் 'மிகுந்த மன வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். விபத்து நடந்ததிலிருந்து படக்குழுவினரை இழந்த அதிர்ச்சியால், இரவுகளில் உறக்கமில்லாமல் தவித்துவருகிறேன். நூலிழையில் அந்த கிரேனிடமிருந்து தப்பித்தேன். அது என்மேல் விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலும், பிரார்த்தனைகளும்' என்று அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

Shankar
ஷங்கர் செய்திகுறிப்பு

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பாதிக்கப்பட்வரிகளின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும் வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும் இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன்.

ஒருமாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குநர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய ப்ரொஜக்டை சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்துகொண்டு களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா. ஒரு சரியான உதவி இயக்குநர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது.

Shankar
ஷங்கர் செய்திகுறிப்பு

எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிஸ் தேவைப்படும் போதெல்லாம் டீ,காபி, தண்ணீர், பிஸ்கெட் என்ற எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய புரெடக்ஷன் பாய் மதுவை அன்று மார்சுவரியில் பார்த்ததும் உடைந்து விட்டேன்.

ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் சந்திரன் இந்தியன் 2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விருமப்பி வந்து இந்த ஷெடுலில் தான் வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை. எவ்வளவோ பாதுகாப்பும் முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாரமால் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.

மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட அவர்கள உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் , காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அங்கு பணி புரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும் கஷ்டங்களையும் பார்க்கும் போது, அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.

கிருஷ்ணாவின் பெற்றோருக்கும், அவரின் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும், மதுவின் குடும்பத்தினருக்கும், சந்திரனின் குடும்பத்தினருக்கும் என் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தத் துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.