சென்னை : இளையராஜாவின் உறவினரும் அவரது குழுவில் நீண்டகாலம் பணியாற்றியவருமான சசிதரன் காலமானார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர் சசிதரன் முனியாண்டி. இளையராஜாவின் ஏராளமான பாடல்களுக்கு பேஸ் கிடார் வாசித்துள்ளார்.
இவர், இளையராஜா மனைவியின் சகோதரர் ஆவார். இவருக்கு நேற்று பிறந்தநாள். இந்நிலையில் அன்றைய தினமே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'எழுந்து வா என்றேன், நீ கேட்கவில்லை'- இளையராஜா