சமீபத்தில் துபாய் சென்றுள்ள இளையராஜா அங்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிரதௌஸ் ஸ்டுடியோவிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள அனைத்து வசதிகளையும் அவருக்கு ஏ.ஆர். ரஹ்மான் சுற்றிக்காட்டியுள்ளார்.
மேலும், இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், 'மேஸ்ட்ரோ இளையராஜாவை எங்களது பிரதௌஸ் ஸ்டுடியோவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. எங்களது ஆர்கெஸ்ட்ரா வாசிப்பதற்கு ஏதேனும் பாடலை இளையராஜா இயற்றுவார்' என்று நம்புவதாகப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் அந்தப் பதிவிற்கு இளையராஜா தற்போது ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார். அதில் 'ரிக்வெஸ்ட் அக்செப்டட். சீக்கிரமே இதற்கான கம்போசிங்கை தொடங்குகிறேன்' என்று பதிலளித்துள்ளார். இதனைக் கண்ட இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி