நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தி டர்ட்டி பிக்சர்'இல் நடித்தவர் நடிகை வித்யா பாலன். இப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் தும்காரி சுலு, கஹானி உள்ளிட்ட கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களிலும் நடித்து அசத்தினார்.
தற்போது இவர், 'மனித கணினி' என்றழைக்கப்படும் சகுந்தலாதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துவருகிறார்.
தமிழில் தனது முதல் படமான நேர்கொண்ட பார்வையில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்த வித்யா, சமீபத்திய நேர்காணலில் பேசியபோது , ”தி டர்ட்டி பிக்சர், கஹானி ஆகிய படங்களுக்குப் பின் நான் விரும்பும் கதைகளைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறேன்.
அது வேற்று மொழிப்படங்களாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் நடிக்கிறேன். அவ்வாறு நான் நடிக்கும் சில கதாபாத்திரங்கள் சிலருக்குப் பிடிக்கலாம். சிலருக்குப் பிடிக்காமலும் போகலாம். அதுபோல என்னை வெறுப்பவர்கள் நான் நடித்த படங்களைப் பார்க்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அசுரன் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள்