ETV Bharat / sitara

காமெடி பட இயக்குநர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது - இயக்குநர் ராம்பாலா - நிக்கி கல்ராணி

காமெடி படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது என இயக்குநர் ராம்பாலா வேதனை தெரிவித்தார்.

Idiot film, idiot movie press meet, இடியட், நிக்கி கல்ராணி, மிர்ச்சி சிவா
இடியட் திரைபட போஸ்டர்
author img

By

Published : Sep 12, 2021, 7:44 PM IST

சென்னை: ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள ஜனரஞ்சகமான பேய் கதையாக திரைக்கு வரவிருக்கும் படம் 'இடியட்'. இவர்களை தவிர ஆனந்தராஜ், ஊர்வசி, அக்ஷரா கவுடா, ரவி மரியா மற்றும் சிங்கமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படைப்பு 'இடியட்'. தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. சென்னை கமலா தியேட்டரில் இன்று இடியட் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

ஒன் லைன் ஸ்டோரி

எல்லோரும் ஒரு முறையாவது முட்டாள்தனமாக நடந்துகொள்ளுவது இயல்பு. அப்படி நடந்து கொள்பவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் 'இடியட்'.

படப்பிடிப்பு தளங்கள்

படத்தின் படப்பிடிப்பு தென்காசி, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

ராஜா பாட்டாசார்ஜீ படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் படத்தொகுப்புக்கு மாதவன் பொறுப்பேற்றுள்ளார். அனைவரையும் கவரும் வகையில் உருவாகியுள்ள 'இடியட்' கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Idiot film, idiot movie press meet, இடியட், நிக்கி கல்ராணி, மிர்ச்சி சிவா
இடியட் திரைபட போஸ்டர்
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம் பாலா, மற்ற பேய் படங்களை போல் இல்லாமல் ஜனரஞ்சகமாக குழந்தைகளோடு பார்க்க கூடிய பேய் படமாக 'இடியட்' இருக்கும்.

காமெடி படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. என்னை பேய் படம் எடுக்க மட்டுமே தயாரிப்பாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த படம் கண்டிப்பாக வெகுஜன மக்களை கவரும் என்று நம்பிக்கை உள்ளது. காமெடி படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு என்று தனியாக விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘தேன்’ திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசின் விருது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.