ETV Bharat / sitara

’இர்ஃபான் கானை அப்பா என்று அழைத்தேன்’ - நடிகை ராதிகா மதன்! - ராதிகா மதன்

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானை தான் அப்பா என்றே அழைத்தேன் என்று நடிகை ராதிகா மதன் தெரிவித்துள்ளார்.

இர்ஃபான் கான்
இர்ஃபான் கான்
author img

By

Published : Aug 2, 2020, 10:28 AM IST

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் 2018ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மறைந்த இர்ஃபான் கான் குறித்து நடிகை ராதிகா மதன் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "நான் அவரை சார் என்று அழைப்பதற்குப் பதிலாக 'அப்பா' என அழைத்தேன். அதற்கு அவர் சிரிப்பார். நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோதே 'அப்பா' என்றுதான் அழைத்தேன். அதை அவர் வித்தியாசமாக உணராமல், என்னைக் கட்டி அணைத்தார்.

அவர் எப்போதுமே எனது அப்பாதான். அவருடன் இணைந்து படத்தில் பணியாற்றியது மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகராகவும், ஒரு நபராகவும் அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

நடிகை ராதிகா மதனும், இர்ஃபான் கானும் இணைந்து நடித்த "ஆங்கிரேஸி மீடியம்" படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிரமப்படாமல் அசால்ட்டாக நடிப்பவர் இர்ஃபான் - சச்சின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.