2017ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகநாதர், நடிகர்கள் ராணா டகுபதி, நவ்தீப், ரவிதேஜா, நடிகைகள் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 12 பேர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், போதைப்பொருள் விவகாரத்தில் பண மோசடியும் நடந்துள்ளதாகத் தெரியவந்தது. இதனையடுத்து அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு, அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 31ஆம் தேதி முதல் இயக்குநர் பூரி ஜெகநாதன், நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நடிகை முமைத் கான் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று (செப்.15) விசாரணைக்காக ஆஜரானாகினார். அவரிடம் வரும் 22ஆம் தேதி வரை இவர்களிடம் விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. மேலும் பிரபலங்களில் வங்கிக் கணக்குகளில் கடந்த ஓராண்டு காலமாக நடந்த பணப்பரிமாற்றம் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.