சென்னை: தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர், தற்போது 'சிவகுமாரின் சபதம்' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகியாக மாதுரி என்பவர் நடித்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸுடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் நேற்று (செப்.30) திரையரங்குகளில் வெளியானது.


இந்நிலையில், நேற்று (செப்.30) காலை 'சிவகுமாரின் சபதம்' திரைப்படத்தை ஆதி, மாதுரி உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தனர். அப்போது, ஆதி ஹிப்ஹாப் பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: படத்தை ஓடிடியில் ஓட்டி பார்த்துவிடுவார்கள் - ஹிப்ஹாப் ஆதி!