தமிழ் சினிமா மட்டும் அல்லாது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து திரையுலகிலும் முக்கிய நடன இயக்குநராக இருப்பவர் பிருந்தா. இவர், தற்போது நடிகர் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோரை வைத்து இயக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'ஹே சினாமிகா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். ராதா ஶ்ரீதர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.