வடசென்னை திரைப்படத்தைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப் படத்தில் தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளது. நவீன் சந்திரா 2014ஆம் ஆண்டு வெளியான ‘சரபம்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.