சிவகார்த்திகேயன் - இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. இதில் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
முன்னதாக இந்தப்படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடலான 'மால்டோ கித்தாப்புல' உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ள நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
-
You guys asked for our selfie pic no? Here it is 😄 #Hero @Siva_Kartikeyan @Psmithran @george_dop @kjr_studios pic.twitter.com/pLx9KyIruc
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">You guys asked for our selfie pic no? Here it is 😄 #Hero @Siva_Kartikeyan @Psmithran @george_dop @kjr_studios pic.twitter.com/pLx9KyIruc
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) November 28, 2019You guys asked for our selfie pic no? Here it is 😄 #Hero @Siva_Kartikeyan @Psmithran @george_dop @kjr_studios pic.twitter.com/pLx9KyIruc
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) November 28, 2019
ஏற்கனவே வெளியான மால்டோ கித்தாப்புல பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இன்று இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட உள்ளது.
இந்நிலையில் படத்தின் நயாகி கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் நீங்கள் எங்களுடைய செல்ஃபி கேட்டிங்க இல்ல? இதோ என்று பதிவிட்டுள்ளார்.