ETV Bharat / sitara

நடிகர் சங்கத்துக்கு புதிய தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்த உத்தரவு - நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தி நீதிமன்றம் உத்தரவு

நடிகர்கள் நாசர், விஷால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் சங்கத்துக்கு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

HC order to conduct election for Nadigar sangam within 3 months
Actor association Election
author img

By

Published : Jan 24, 2020, 5:03 PM IST

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களில் மீண்டும் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சங்க உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் ஜூன் 19ஆம் தேதி உத்தரவிட்டார்.

மாவட்ட பதிவாளரின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்த விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. அத்துடன் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இந்த சூழ்நிலையில், தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை சிறப்பு அலுவலராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நாசர் மற்றும் பொருளாளராக இருந்த கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்தனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், விசாரணையை முடித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த நவம்பர் 26ஆம் தேதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில், நீதிபதி கல்யாணசுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, 2019 ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், திருத்தம் செய்யப்பட்ட புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து 3 மாத கால அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை சங்க நிர்வாகத்தை சிறப்பு அலுவலர் கீதாவே தொடர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

Intro:Body:நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், 3 மாதத்தில் மீண்டும் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சங்க உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டார்.

மாவட்ட பதிவாளரின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்த விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதி அளித்தும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி உறுப்பினர்கள் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்தனர்.

வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நாசர் மற்றும் பொருளாளராக இருந்த கார்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், விசாரணையை முடித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த நவம்பர் 26 ம் தேதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கல்யாணசுந்தரம், 2019 ஜூன் 23ல் நடத்தப்பட்ட
தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், திருத்தம் செய்யப்பட்ட புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து 3 மாத கால அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் எனவும், மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை சங்க நிர்வாகத்தை சிறப்பு அதிகாரி கீதா'வே தொடர்ந்து கவனிக்க வேண்டும் என உத்தரவிட்டு நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை
தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.