ETV Bharat / sitara

90's கிட்களின் க்யூட் தேவதை! HBDGenelia - Tujhe Meri Kasam

கதாநாயகிகள் கதாநாயகன் குறித்து கனவு கண்டுகொண்டிருந்த படங்களில் ரசிகர்கள் இவரை கனவில் கண்டுகொண்டிருந்தனர். அவர்தான் 90-களின் இளவரசி ஜெனிலியா.

HBDGenelia
HBDGenelia
author img

By

Published : Aug 5, 2021, 8:35 AM IST

ஒரு மழை நாளில் கதாநாயகன் மழைக்கு ஏதோ ஒரு இடத்தில் ஒதுங்குகிறான். குடையுடன் போராடிக்கொண்டிருக்கும் அவனை குளிரும் மழையோடு சேர்த்து நனைத்துக்கொண்டிருக்கின்றது. அந்தத் தருணத்தில் மழையை ரசித்துக்கொண்டிருக்கிறாள் கதாநாயகி. பார்த்த உடனே காதல் கொள்கிறான் அல்லது ஈர்க்கப்படுகிறான் நாயகன். இப்படியான காட்சியமைப்பை சச்சின் திரைப்படத்தில் கதாநாயகிக்காக இயக்குநர் ஜான் மகேந்திரன் வைக்கிறார்.

HBDGenelia
சச்சின்

இப்பொழுது இந்தக் காட்சியை நினைவுபடுத்திப் பாருங்கள். வேறொரு கதாநாயகன்... காதலிக்க பெண் தேடி அலைந்து எந்தப் பெண்ணும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறான். அப்படியான மனநிலையில் கோயிலில் தன்னை ஒருத்தி இடித்துவிட்டு கொம்பு முளைக்கும் என விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அவளை ஸ்லோ மோஷனில் ரசித்துக் கொண்டிருக்கிறான்.

இரண்டு படங்களிலும் ஒரே கதாநாயகிதான். ஆனால் இந்தப் படங்களில் வேறு எவரேனும் நடித்திருந்தால் அவரை இந்த அளவுக்கு ரசிகர்கள் ரசித்திருப்பார்களா என்று கேட்டால் அதற்கான பதிலை யூகங்களுக்கே விட்டுவிடலாம்.

HBDGenelia
சந்தோஷ் சுப்பிரமணியம்

இந்தக் இரண்டு காட்சிகளும் அவரின் இயல்பான நடிப்பை பறைசாற்றுகின்றன. அப்படி தனது நடிப்பினால் மட்டுமல்லாமல் க்யூட்னஸாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்தவர் ஜெனிலியா.

தமிழ் சினிமாவில் சொற்ப திரைப்படங்களில்தான் நடித்திருந்தார். இருப்பினும் இன்றுவரை ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கிறார். எத்தனையோ ஹீரோயின்கள் எக்ஸ்பிரஷன்கள் பல கொடுத்து க்யூட்னஸை வரவழைக்கிறார்கள். ஆனால் ஜெனிலியா போல வருமா என அவரது ரசிகர்கள் சிலாகித்துக் கொள்கின்றனர்.

ஏதோ ஒரு திருமணத்தில் பெண் தோழியாக வந்த ஜெனிலியாவை பார்க்கர் பேனா விளம்பரத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். பல தயக்கங்களுக்குப் பிறகு அதில் நடிக்க அவர் ஒப்புக்கொள்கிறார். பிறகு 2003ஆம் ஆண்டு அவரது இந்நாள் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்குடன் துஜே மேரி கசம் படத்தில் அறிமுகமாகிறார்.

HBDGenelia
துஜே மேரி கசம்

அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெறவும் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் ஜெனிலியாவுக்கு வருகின்றன. பார்க்கர் பேனா விளம்பரத்தைப் பார்த்து இயக்குநர் ஷங்கரும் ஜெனிலியாவுக்கு பாய்ஸ் பட வாய்ப்பை வழங்குகிறார். இப்படித்தான் தமிழ் சினிமாவுக்கு ஜெனிலியா அறிமுகமானார்.

அதன் பிறகு வந்த சச்சின் படத்தில் ஜெனிலியா அதிக கவனம் பெற்றார். 2006ஆம் ஆண்டு வெளியான பொம்மரில்லுவில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்தத் திரைப்படத்துக்குப் பிறகு அதன் ரீமேக்கான சந்தோஷ் சுப்பிரமணியம் (2008) திரைப்படத்திலும் அவரே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன் பிறகு அவரைப்போன்றே பல ஹீரோயின்கள் க்யூட்டாக நடிக்க முயற்சி செய்தாலும் அது ஜெனிலியாவின் க்யூட்னஸுக்கு இணையாகவில்லை என்பது அவரது வெறித்தானமான ரசிகர்களின் கூற்று.

HBDGenelia
பொம்மரில்லு

2012ஆம் ஆண்டு தான் 10 ஆண்டுகளாக காதலித்துவந்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் அவர் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் தனது க்யூட் ரியாக்ஷன் காணொலிகளால் ரசிகர்களைக் கிறங்கடித்துக்கொண்டிருக்கிறார்.

HBDGenelia
கணவர் ரித்தேஷுடன்

இன்று ஜெனி தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் கம்பேக் தருவாரா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் கம்பேக் கொடுங்க ஜெனி!

இதையும் படிங்க: HBD ரித்விகா: தனித்துவ நடிப்பால் கோலிவுட்டில் கவனம் ஈர்த்த 'மெட்ராஸ்'காரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.