M. Kumaran Son of Mahalakshmi படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அசின் 'கஜினி', 'வரலாறு', 'போக்கிரி' என தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத சில படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். M. Kumaran Son of Mahalakshmi என்னும் முதல் படத்திலேயே அசின், சென்னை செந்தமிழை மறக்கச் செய்தார். அசின் தமிழ் சினிமாவில் பயணித்த வரை, கதாநாயகிக்கும் முக்கியத்துவமுள்ள படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்துவந்தார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகன், கதாநாயகியைப் புகழ்ந்து பெரும்பாலும் ஒரு பாடல் இடம்பெறுவது வழக்கம். அசின் பிறந்தநாளான இன்று, அவரை தமிழ் சினிமா கவிஞர்கள் எவ்வாறு வர்ணித்திருக்கிறார்கள் என்பதைக் காணலாம்...
M. Kumaran Son of Mahalakshmi
உன்னைக் காணவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்
- நா. முத்துக்குமார்
கஜினி
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
கவிஞர் தாமரை
வரலாறு
மருந்துகள் இல்லா தேசத்தில்கூட மைவிழிப் பார்வைகள் போதும்
- வைரமுத்து
போக்கிரி
அன்பே உன் இதழின்
சிணுங்களெல்லாம்
பிள்ளைத் தமிழே
பிள்ளைத் தமிழே
அங்கங்கே உனக்குள்
படித்துக் கொண்டேன்
சங்கத் தமிழே
சங்கத் தமிழே
பா. விஜய்
காவலன்
தலையசைக்குது உன் கண்கள்
தவிதவிக்குது என்நெஞ்சம்
ஒரு தீ போல ஒருத்தி வந்து
உயிரைப் பந்தாட
கபிலன்
தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்த அசின், பாலிவுட் திரையுலகிலும் தடம்பதித்தார். பின்னர் ராகுல் ஷர்மா என்னும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இன்று அவரது 34ஆவது பிறந்தநாள், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அசின்! HBD Asin...