தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. தென்னிந்திய திரைத்துறையில் விஜயசாந்திக்கு பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியவர்.
இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து 'சூப்பர்' எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு ’ரெண்டு’ திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.
யோகா ஆசிரியை
அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார்.
2005ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.2009ல் இவர் நடித்த ’அருந்ததி’ படம் இவருக்கு திரைத்துறையில் பயணிக்க ஒரு மைல் கல்லாக அமைந்தது. அருந்ததி வெற்றிக்குப் பிறகு இவர் தமிழில் வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வ திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் படத்தின் மூன்று பக்கங்களிலும், இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
2015ல் அனுஷ்காவின் திரை வாழ்வில் ஒரு சாதனை ஆண்டாக அமைந்தது. மொத்தம் நான்கு திரைப்படங்கள் வெளியானது. முதலாவது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படம். இந்த திரைப்படத்தில் அனுஷ்கா, முதன் முறையாக அஜீத்துடன் இணை சேர்ந்து நடித்திருந்தார்.
பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை
அதே ஆண்டில் சுமார் இரண்டு வருடக் கடின உழைப்பில் வெளியான வெற்றி இயக்குநர் ராஜ மெளலியின் ’ பாகுபலி’ திரைப்படம் இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஓர் புதிய சகாப்தத்தையும், சாதனையையும் உண்டாக்கிய திரைப்படம். இப்படத்தில் அனுஷ்கா தேவசேனா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இவர் தனது கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைத்தது.
தமிழில் ’இஞ்சி இடுப்பழகி’ என்றும், தெலுங்கில் ’சைஸ் ஸீரோ’ என்றும் வெளியான இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காகவே சுமார் 18 கிலோ உடல் எடையைக்கூட்டி நடிகை அனுஷ்கா நடித்துள்ளார்.
வேறு யாரும் இதுவரை செய்ததில்லை. வேறு ஒருவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு சாதனையை, இந்த திரைப்படத்தின் மூலம் அனுஷ்கா செய்துள்ளார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீசிலும் ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது.
பாகுபலியின் தேவசேனாவாக ஜொலித்த அனுஷ்கா செட்டிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க : நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடை - கமல்ஹாசன்