ETV Bharat / sitara

HBD ஆனந்த் பாபு - மறக்க முடியுமா 'பூங்குயில் ராகமே' நாயகனை!

நடனத்தில் புதிய பாணியை உருவாக்கி 1980-களில் ரசிகர்களைத் தன்வசப்படுத்திய நாயகன் ஆனந்த் பாபு.

HBD ஆனந்த் பாபு
HBD ஆனந்த் பாபு
author img

By

Published : Aug 30, 2021, 7:33 AM IST

Updated : Aug 30, 2021, 8:06 AM IST

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை மன்னனாகக் கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ். இவர் மிக அருமையாக நடனமும் ஆடக்கூடியவர். இவரது மகன்தான் 1980-களில் நடனத்தில் புதிய பாணியை உருவாக்கி ரசிகர்களை ஈர்த்தவர். தனது தந்தை அளவுக்கு நடிப்புலகில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் சொல்லும்படியான சில படங்களில் பேசுபொருளாக நடித்தவர்.

இவர் 1983இல் 'தங்கைக்கோர் கீதம்' படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். 55 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 'நான் பேச நினைப்பதெல்லாம்' திரைப்படம் இவரது கலைப்பயணத்தின் முக்கியமானது.

காதலில் தோற்றால் வாழ்க்கையில் தோற்றதாகப் பொருள் இல்லை

அப்படத்தில் இடம்பெற்ற 'பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே', 'ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றவை. தமிழ்த் திரையுலகிற்குப் புதிய பாதையை காட்டிய விக்ரமன் இயக்கத்தில் உருவானதுதான் இப்படம்.

தன்னம்பிக்கையூட்டும் படங்களைக் கொடுத்து எப்போதும் தமிழ்ச் சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருந்தவர் விக்ரமன். இப்படத்தில் காதல் தோல்விகளைத் தனித்தனியே சந்திக்கும் ஆனந்த் பாபுவும், மோகினியும் சந்திக்கும் சூழல் ஏற்படும். இசையமைப்பாளர் வாய்ப்பைத் தேடி அலைந்துகொண்டிருக்கும் ஆனந்த் பாபு, மோகினியின் ஐஏஎஸ் கனவை நனவாக்க உதவிபுரிவார்.

பின்னர் அவரும் இசையமைப்பாளராகி விடுவார். இறுதியில் இருவரும் இணைவர், இதுதான் கதைக்களம். காதலில் தோற்றால், வாழ்க்கையில் தோற்றதாகப் பொருள் இல்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த படம் இது. விக்ரமன் தன் திரை வாழ்க்கை குறித்து எழுதிய நூலுக்கு வைத்த பெயர், 'நான் பேச நினைப்பதெல்லாம்' என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சேரன் பாண்டியன்

மேலும், ஆனந்த் பாபு நடித்த படங்களில் இடம்பெற்ற 'ஏ ஃபார் அம்பிகா', 'தேவன் கோவில்', 'ஆகாய கங்கையே' போன்ற பாடல்கள் அக்கால ரசிகர்களால் விரும்பி கொண்டாடப்பட்டவை. மேலும், ஆனந்த் பாபு நடித்த 'சேரன் பாண்டியன்' நல்ல வசூலை ஈட்டியது. 33 லட்சம் ரூபாய் செலவில் உருவான இப்படம் உணர்த்தியது...

  • ஒரு படத்தின் வெற்றிக்குத் தெளிவான திரைக்கதை, இயக்கம் இருந்தால்போதும், பட்ஜெட் முக்கியமில்லை.

இப்படத்தில் கிராமத்தின் தலைவரான விஜயகுமார், அவரது இளைய சகோதரரான சரத்குமாரை வெறுக்கிறார். ஏனென்றால் விஜயகுமாரின் தந்தை, இரண்டாவது திருமணம் செய்துகொண்ட, பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்குப் பிறந்தவர் சரத்குமார் என்பதால்.

சரத்குமாரின் உறவினரான ஆனந்த் பாபு இந்தக் கிராமத்திற்கு வருகிறார். இவரும், விஜயகுமாரின் மகளான, ஸ்ரீஜாவும் காதல் வயப்படுகின்றனர். இவர்களின் காதல் என்ன ஆனது? விஜயகுமார், தனது சகோதரரைப் புரிந்துகொண்டாரா என்பதுதான் கதைக்கரு.

நடிப்பில் மூன்றாவது தலைமுறை

'கண்கள் ஒன்றாக கலந்ததா', 'காதல் கடிதம்', 'சம்பா நாத்து', 'வா வா எந்தன்', 'கொடியும்', 'சின்னத் தங்கம்', 'எதிர்வீட்டு', 'ஊருவிட்டு ஊருவந்து' என இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதுமட்டுமின்றி 'சிகரம்', 'வானமே எல்லை' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார் ஆனந்த் பாபு.

HBD ஆனந்த் பாபு
மகன் கஜேஷுடன் ஆனந்த் பாபு

இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டுமுதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். ஆதவன் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு அண்ணனாக தனது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

இவரது பிள்ளைகள் ஜோஸ்யா, கஜேஷ், ஜான், ரெஜினா மேரி. இவரது இளைய மகனான கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவருகிறார். ஆனந்த் பாபு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு ஈடிவி பாரத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இதையும் படிங்க: தமிழ்த் திரையுலகின் ’நகைச்சுவை கிங்’ நாகேஷ் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு

Last Updated : Aug 30, 2021, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.