சென்னை: ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தாராள பிரபு' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஆகிய எட்டு பேர் இசையமைத்துள்ளனர். படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார்.
-
Happy to present the super-fun #DharalaPrabhuTrailer https://t.co/RX7WkTN01W@iamharishkalyan @TanyaHope_offl @Actor_Vivek @krishnammuthu @Screensceneoffl @SonyMusicSouth @nixyyyyyy @sidd_rao @selvakumarskdop @onlynikil @CtcMediaboy @editorKripa @Pallavi_offl
— Jayam Ravi (@actor_jayamravi) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Best wishes !
">Happy to present the super-fun #DharalaPrabhuTrailer https://t.co/RX7WkTN01W@iamharishkalyan @TanyaHope_offl @Actor_Vivek @krishnammuthu @Screensceneoffl @SonyMusicSouth @nixyyyyyy @sidd_rao @selvakumarskdop @onlynikil @CtcMediaboy @editorKripa @Pallavi_offl
— Jayam Ravi (@actor_jayamravi) February 24, 2020
Best wishes !Happy to present the super-fun #DharalaPrabhuTrailer https://t.co/RX7WkTN01W@iamharishkalyan @TanyaHope_offl @Actor_Vivek @krishnammuthu @Screensceneoffl @SonyMusicSouth @nixyyyyyy @sidd_rao @selvakumarskdop @onlynikil @CtcMediaboy @editorKripa @Pallavi_offl
— Jayam Ravi (@actor_jayamravi) February 24, 2020
Best wishes !
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா - யாமி கெளதம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'விக்கி டோனர்' படத்தின் ரீமேக்காக தாராள பிரபு படம் உருவாகியுள்ளது. விந்து தானம் பற்றிய கதையம்சத்தில் அமைந்துள்ள இந்தப் படம், செயற்கைக் கருத்தரிப்புக்காக விந்து தானம் செய்யும்போது ஏற்படும் குளறுபடிகளை காமெடியான திரைக்கதையுடன் சொல்கிறது.
இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கேசன்ரைவிட கொடுமை நமது சமுதாயத்தை ஆட்டி படைப்பது குழந்தையின்மை. இதை சரிசெய்யும் நோக்கில் மருத்துவர் விவேக் ஹரீஷ் கல்யாணுடன் மேற்கொள்ளும் முயற்சியை நகைச்சுவையாக காட்சிபடுத்தியுள்ளனர். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதையும் வாசிங்க: 'தாராள பிரபு'வில் தாராளமாக இசையமைக்கும் எட்டு இசையமைப்பாளர்கள்