ஹைதராபாத் : செல்லமே படத்தில் விடலை பையனாக பரத் செய்த வில்லத்தனம் இன்றளவும் உயிரோட்டம்.
தமிழ் ரசிகர்களால் சின்ன தளபதி என அழைக்கப்படும் பரத் 1983ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி பிறந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பிஸியாக நடித்துவரும் பரத் தீவிர கால்பந்து ரசிகர். இவர் சின்ன வயதிலேயே கைதேர்ந்த டான்ஸராக விளங்கினார். 11 வயதிலேயே சர்வதேச டான்ஸ் போட்டிகளில் கலந்துள்ளார்.
இவர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் 2003ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானார். இந்தப் படம் பரத்துக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து ஜெயராஜ் இயக்கத்தில் 2004இல் போர்த் பீப்பிள் (4 the People) என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.
இவரின் கேரியலில் காதல் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பட்டிதொட்டியெங்கும் பரத்துக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. படத்தின் காதல் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. தொடர்ந்து பட்டியல், எம் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை, வானம், ஐந்து ஐந்து ஐந்து, காளிதாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
விஷாலின் செல்லமே படத்தில் விடலை பையனாக வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார். இது அவருக்கு பலதரப்பட்ட ரசிகர்களை பெற்றுகொடுத்தது.
தொடர்ந்து, 2019இல் மலையாளத்தில் நடந்த டான்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார். டைம் என்ன பாஸ் என்ற இணைய தொடரிலும் நடித்துள்ளார்.
தமிழில் வெளியான பிரபல டான்ஸ் தொடரான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான 'வெயில்' படம் வியாபார ரீதியாக வேண்டுமானால் பின்னடைவை சந்தித்திருக்கலாம். ஆனால் பரத்துக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்தப் படத்துக்கு பின்னரும் அரவான் படத்திலும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்திருந்தார்.
பரத் தனது இளவயது தோழியான ஜெஸியை காதலித்து 20013இல் கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பரத் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க வாழ்த்துகள். ஹேப்பி பர்த்டே பரத்!
இதையும் படிங்க : எஸ்.ஜே.சூர்யா- கோலிவுட்டிற்குக் கிடைத்த நியூ ஸ்டைல்