ETV Bharat / sitara

என்னது ஹன்சிகா கைவசம் இவ்வளவு படங்களா? - ஹன்சிகா படங்கள்

நடிகை ஹன்சிகா தனது கைவசம் இந்த ஆண்டு ஒன்பது திரைப்படங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

hansika
hansika
author img

By

Published : Jan 3, 2022, 9:16 PM IST

தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துவருபவர் ஹன்சிகா. இவர் தற்போது ரவுடி பேபி படத்தில் நடித்துவருகிறார். தனது படங்கள் குறித்து ஹன்சிகா கூறுகையில், "2021ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது.

குறிப்பாக திரையுலகம் தாங்க முடியாத கடினமான சோதனைகளால் சிரமப்பட்டது. ஆனால் இந்த 2022 புத்தாண்டின்போது அனைவரின் வாழ்க்கையும் இயல்புநிலைக்குத் திரும்புவது, இருட்டை விலக்கி தூரத்தில் தெரியும் வெளிச்சம்போல், பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தக் கடினமான காலத்தில் அன்பை அள்ளிக் கொடுக்கும் ஏராளமான மக்களைக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டத்திலுள்ள எனது ஒன்பது வெவ்வேறு திரைப்படங்களை உங்களுக்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த ஆண்டு அனைவரின் கனவுகளும் இலக்குகளும் நனவாக வேண்டும் என நான் விரும்புகிறேன். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள். அனைவரிடத்திலும் அன்பைப் பரப்ப வேண்டியது காலத்தின் தேவை. நன்றி" என்றார்.

இதையும் படிங்க: நாயகனான அறிமுகமாகும் ப்ரஜின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.