நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50 வது திரைப்படமான “மஹா” அறிவிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது முதலே, அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
இதில் நடிகர் சிம்பு. ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜூலை ஒன்றாம் தேதி இப்படத்தின் டீஸரை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் வெளியானது முதல் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, வைரலாகிவருகிறது.
இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய “மஹா” படத்தின் டீஸரில், மிக வித்தியாசமான கதை களத்தில், இதுவரை பார்த்திராத தோற்றத்தில் ஹன்சிகா மோத்வானி கலக்கியுள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மஹா திரைப்படத்தின் டீசர் யூ-டியூப் தளத்தில் சுமார் 7 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
பலத்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து மஹா திரைப்பட குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் படத்தின் கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.