'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்துவருகிறார். 'வலிமை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஸ்பெயினில் நடத்த முடிவு செய்தனர். இதற்கிடையில் கரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கிறார், எந்த ஜானரில் திரைப்படம் உருவாகிறது என்ற எந்தத் தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருக்கிறது.
இந்நிலையில் முதல் முறையாக இயக்குநர் ஹெச்.வினோத், 'வலிமை' திரைப்படத்தின் கதை எப்படி இருக்கும் என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில், "எனது ஆல் டைம் ஃபேவரைட் திரைப்படமான 'மங்காத்தா' திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். தல ரசிகர்கள் அடுத்த 'மங்காத்தா' வான 'வலிமை' படத்திற்கு தயாராகுங்கள்'' என்று கூறியுள்ளார். இந்த செய்தி தல ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவுடன் முதல் முறையாக இணைந்த இளம் கதாநாயகி?