'இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெகான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
-
#maaratheme releasing in a week #SooraraiPottru pic.twitter.com/QHj4nkBFuq
— G.V.Prakash Kumar (@gvprakash) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#maaratheme releasing in a week #SooraraiPottru pic.twitter.com/QHj4nkBFuq
— G.V.Prakash Kumar (@gvprakash) January 20, 2020#maaratheme releasing in a week #SooraraiPottru pic.twitter.com/QHj4nkBFuq
— G.V.Prakash Kumar (@gvprakash) January 20, 2020
சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தற்போது படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டரில், 'சூரரைப் போற்று' மாறா தீம் இந்த வாரத்தில் வெளியாகும் என்று சூர்யா பாடியபோது எடுக்கபட்ட வீடியோவுடன் ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த ட்வீட்டையடுத்து '#MaaraTheme' என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ’காலா’, ‘வடசென்னை’ புகழ் பாடலாசிரியர் அறிவு எழுதிய இந்தப் பாடலை சூர்யா பாடியுள்ளார்.