ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் சி.வி. குமார் இணைந்து வழங்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் இப்படத்துக்கு 'ரிபெல்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிபெல் படத்தின் பூஜை இன்று (டிச.2) தொடங்கியது.
இதில் இயக்குநர் பா. இரஞ்சித், நலன் குமாரசாமி, கௌரவ், தயாரிப்பாளர் அம்மா சிவா, நடிகர் ஆரி உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சமூகத்திற்கான கதை 'ரிபெல்'
அப்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கே.இ. ஞானவேல் ராஜா தான் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தி, வெற்றி பெற வைத்தார். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்வது மகிழ்ச்சி.
நாங்கள் இணைந்து செய்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இந்தப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும்.
நிகேஷின் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய ஒரு கதை இதில் இருக்கிறது. அதை நாங்கள் சரியாகச் சொல்வோம் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Valimai update:'வலிமை' திரையரங்கு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம் எது?