ETV Bharat / sitara

'எனக்கு அந்தக் கனவு மீண்டும் வேண்டும்' - கோவிந்த் வசந்தா - கோவிந்த் வசந்தாவின் ரஹ்மான் இசைக் கனவு

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான் கண்ட கனவைப் பற்றி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

govind
govind
author img

By

Published : May 28, 2020, 3:48 PM IST

மலையாளத்தில் தைக்குடம் பிரிட்ஜ் (Thaikkudam Bridge) என்னும் மியூஸிக் பேண்ட் மூலம் பிரபலமானவர் கோவிந்த் வசந்தா. வயலின் இவரது ஃபேவரைட் இசைக்கருவியாகும். தமிழில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படம் மூலம் பிரபலமடைந்தார்.

இப்படத்தில் வெளியான 'காதலே...காதலே' பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கோவிந்த் வசந்தா '96' படத்திற்கு முன்பே தமிழில் 'ஒரு பக்க கதை' எனும் படத்துக்கு இசைமைத்திருந்தார். ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

  • @arrahman asking me to give my opinion on his next Song. He plays the song. Only Few seconds down and I'm teared up already. What a song , and the vocals starts . Damn , it's me singing, unbelievable!! Suddenly..Door bell rang, I woke up. Depression! I want the dream back 😭

    — Govind Vasantha (@govind_vasantha) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் சமீபத்தில் தான் கண்ட கனவு குறித்து கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரஹ்மான் அவரது அடுத்த பாடலைப் பற்றி என்னிடம் அபிப்ராயம் கேட்கிறார். பாடலை ஒலிக்க வைக்கிறார். சில நொடிகள் தான் பாடல் ஓடுகிறது. நான் அதற்குள் ஆனந்தக் கண்ணீர் விட ஆரம்பித்தேன். என்ன ஒரு பாடல். குரல் ஆரம்பிக்கிறது. நான்தான் பாடுகிறேன். நம்பவே முடியவில்லை. உடனே ஒரு டோர் பெல் அடிக்கிறது. நான் விழித்துக்கொண்டேன். மன அழுத்தம். எனக்கு அந்தக் கனவு மீண்டும் வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார். இந்தப் பதிவுக்கு பலரும், உங்கள் கனவு கூடிய விரைவில் நிறைவேறும் என்று பதிலளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தடையை மீறி பாடகி சின்மயிக்கு நான் வாய்ப்பு தருகிறேன் - கோவிந்த் வசந்தா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.