ETV Bharat / sitara

'சிம்பன்சிக்காக குழந்தைகளுடன் பார்க்கலாம்' - கொரில்லா திரை விமர்சனம் - ஜீவா

கொரில்லா படம் லாஜிக் கிலோ என்ன விலை எனக் கேட்கத் தோன்றினாலும், சிம்பன்சிக்காக குழந்தைகள் ரசிப்பார்கள் என்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு படத்திற்குச் செல்லலாம்.

கொரில்லா
author img

By

Published : Jul 14, 2019, 6:51 PM IST

ஜீவா நடித்த கொரில்லா படத்தை ஆல் இன் பிக்ச்சர்ஸ் தயாரிதுள்ளது. இயக்குநர் டான் சாண்டி படத்தை இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

ஜீவா போலி மருத்துவர் கதாபாத்திரத்தில் வருகிறார். ஐடி வேலை பறி போன சதீஷ் (சதீஷ்), நடிப்பு ஆசையில் சுற்றும் வெங்கட் ( விவேக் பிரசன்னா) இந்த மூவரும் ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள். கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயலும் விவசாயி சாதீக்கை(மதன் குமார்) நான்காவதாக இணைத்துக் கொள்கிறார்கள். நால்வருக்கும் பணம் தேவை என்பதால் வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். எதிர்பாராத விதமாகச் சிறு வயதிலேயே ஜீவாவால் காப்பாற்றப்பட்டு இவர்களுடன் இருக்கும் சிம்பன்சி காங். இந்த ஐவரும் சேர்ந்து வங்கியில் கொள்ளை அடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

jeeva-shalini
ஜீவா-ஷாலினி பாண்டே

லோக்கல் பாய் கதாபாத்திரம் என்றாலே ஒரு கை பார்க்கும் ஜீவா இந்தப் படத்திலும் தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாகச் செய்துள்ளார். ஷாலினி பாண்டேயின் நடிப்பு இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகியா என சந்தேகம் வரும் அளவுக்கு உள்ளது. அவருடைய நடிப்பு ஒரு சில ரியாக்‌ஷன்கள் மட்டுமே வெளிப்படுகிறது.

சதீஷ், விவேக் பிரசன்னா காம்போவின் டைமிங் நகைச்சுவைகள் ஈர்க்கின்றன. எனினும் யோகிபாபு தான் திரையில் அதிகம் கவனம் பெறுகிறார். இந்தப் படத்தின் கதை ஓட்டத்திற்குச் சிம்பன்சியின் முக்கிய பங்கு என்று எதுவுமில்லை. சிம்பன்சி இல்லாமல் இருந்தாலும் திரைக்கதையில் எந்த வித மாற்றமும் ஏற்படாது.

jeeva and shalini with gorilla
ஜீவா-ஷாலினி பாண்டே கொரில்லாவுடன்

எதற்காக இந்த சிம்பன்சி இந்த படத்தில் உள்ளது என்பதே இயக்குநரிடமே கேட்க வேண்டும். ஒரு சிம்பன்சியை எப்படி சான்றிதழ் இல்லாமல் வீட்டில் வளர்க்க முடியும். படமும் சுவாரசியம் இல்லாமல் நகர்வதால் ஒரு கட்டத்தில் கொட்டாவியை வரவழைக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று விவசாயக் கடன் போராட்டத்தையும் மக்கள் முன்னெடுக்க வேண்டும் கூறுவதில் இயக்குநர் கைத்தட்டல் பெறுகிறார். மற்ற படி சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் படத்தில் எதுவுமில்லை என்பதே உண்மை.

குருதேவ் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ் இசை இரண்டுமே சுமாராகத்தான் வந்துள்ளன. பாடல்கள் கூட ரசிக்கும் படியாய் இல்லை. சிம்பன்சியைக் கொண்டு சொல்லும் கதை எதோ புதுமையாக எடுத்திருக்கிறார்கள் என நினைத்தால் அப்படியெல்லாம் இல்லை எனச் சொல்லி சினிமாவுக்காக பேசப்படும் கமர்சியல் விவசாய பிரச்சினையைப் பேசுகிறது. விவசாயப் போராட்டம் விவசாயிகளுக்குக் கைகொடுத்தது இல்லையோ..? ஆனால் கோடம்பாக்கத்து சினிமாக்காரர்களுக்கு பணம் கொட்டும் மரமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

yogi babu with gorilla
யோகி பாபு மற்றும் கொரில்லா

கொரில்லா படம் லாஜிக் கிலோ என்ன விலை எனக் கேட்கத் தோன்றினாலும், சிம்பன்சிக்காகக் குழந்தைகள் ரசிப்பார்கள் என்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு படத்திற்குச் செல்லலாம்.

கொரில்லா... மனதை அவ்வளவாக கொள்ளை கொள்ளவில்லை.

Intro:கொரில்லா பட விமர்சனம்Body:தயாரிப்பு. - ஆல் இன் பிக்ச்சர்ஸ்
இயக்குனர். - டான் சாண்டி
இசை - சாம் சி எஸ்
ஒளிப்பதிவு. - ஆர் பி குருதேவ்
படத்தொகுப்பு - ரூபன்
இசைப்பயிற்சி - சுதேஷ் குமார்
நடிகர்கள் - ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, ராதாரவி, சந்தான பாரதி, மொட்டை ராஜேந்திரன், சதீஷ், விவேக் பிரசன்னா, இவர்களோடு சிம்பான்சி ஙோ

சிறு சிறு திருட்டு வேலைகளோடு போலி மருத்துவர் என சீட்டிங் வேலை செய்யும் ஜீவா(ஜீவா) , ஐடி வேலை பறி போன சதீஷ் (சதீஷ்) , நடிப்பு ஆசையில் சுற்றும் வெங்கட் ( விவேக் பிரசன்னா) இந்த மூவரும் ஒரே அறையில் தாங்கும் நண்பர்கள். இவர்களுடன் நான்காவதாக இணைகிறார் கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயலும் விவசாயி சாதீக்(மதன் குமார்) . நால்வருக்கு பணம் தேவை வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். எதிர்பாரா விதமாக சிறு வயதிலேயே காப்பாற்றப்பட்டு இவர்களுடன் இருக்கும் சிப்பென்சி காங்(ஙோ). ஐவரும் வங்கிக் கொல்லி அடித்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.

லோக்கல் பாய் கேரக்டர் என்றாலே ஒரு கை பார்க்கும் ஜீவா இந்தப் படத்திலும் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். ஆனால் அந்த பழைய சாக்லேட் பாய் மிஸ்ஸிங் .

ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி நாயகியா என டவுட் வரும் அளவுக்கு உள்ளது அவருடைய நடிப்பு ஒரு சில ரியாக்‌ஷன்கள் மட்டுமே வருகின்றன.

சதீஷ் , விவேக் பிரசன்னா காம்போ டைமிங் காமெடிகள் ஈர்க்கின்றன. எனினும் யோகி பாபு அதிகம் ஈர்க்கிறார்.

இந்தப் படத்தின் கதை ஓட்டத்திற்கு சிம்பன்சியின் முக்கிய பங்கோ திரைக்கதையில் மாற்றமோ ஏற்படவில்லை எதற்காக இந்த சிம்பான்சி இந்த படத்தில் உள்ளது என்பது இயக்குனருக்கே வெளிச்சம்

ஒரு சிப்பென்சியை எப்படி சான்றிதழ் இல்லாமல் வீட்டில் வளர்க்க முடியும். இதில் சுவாரசியம் இல்லாமல் வங்கி கொள்ளை எனப் ஒரு கட்டத்தில் கொட்டாவி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று விவசாய கடன் போராட்டத்தையும் மக்கள் முன்னெடுக்க வேண்டும் கூறுவதில் கைத்தட்டல் பெறுகிறார் இயக்குனர்.

குருதேவ் ஒளிப்பதிவு , சாம் சி.எஸ் இசை இரண்டுமே சுமார் . பாடல்கள் அதனினும் சுமார்.

சிப்பென்சிக்கு சொல்லும் கதை படம் எதோ புது கான்செப்ட் என நினைத்தால் அதெல்லாம் இல்லை என சொல்லி சினிமாவுக்காக பேசப்படும் கமர்சியல் விவசாய பிரச்னை பேசுகிறது. விவசாயப் போராட்டம் விவசாயிகளுக்கு கைகொடுத்தது இல்லையோ ஆனால் கோடம்பாக்கத்து சினிமாக்காரர்களுக்கு பணம் கொட்டும் ஒரு கான்செப்ட் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை

'
Conclusion:கொரில்லா' லாஜிக் கிலோ என்ன விலை எனக் கேட்கத் தோன்றினாலும், சிப்பென்சிக்காக குழந்தைகள் ரசிப்பார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.