மலையாளத்தில் சுரஜ் வெஞ்சராமுடு நடிப்பில் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. பாசத்திற்காக ஏங்கும் தந்தை, வெளிநாட்டிலிருந்து மகன் கொண்டுவரும் ரோபோவுடன் நட்பாகிவிடுகிறார். மிகவும் சுவாரஸ்யமான இந்தக் கதை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் ரீமேக்காகும் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை முன்னணி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கைப்பற்றினார். அவரிடம் உதவியாளர்களாகப் பணியாற்றிய சபரி, ரவணன் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.
'கூகுள் குட்டப்பா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன், லாஸ்லியா நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா கடந்த 3ஆம் தேதி வெளியிட்டார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
படத்தில் குட்டப்பாவாக வரும் ரோபோ செய்யும் சேட்டை, சமையல் செய்வது எனப் பல வேலைகளைச் செய்கின்றது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை செய்த அர்ச்சனா - தற்போதைய நிலை என்ன?