ETV Bharat / sitara

இசையமைப்பாளரை கண்டுப்பிடித்தால் தங்கக்காசு : தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன்! - கே.டி.குஞ்சுமோன்

தமிழ் திரையுலகில் பிரமாண்ட படங்கள் தயாரிப்பதிலும், அவற்றை பிரமாண்டமாக விளம்பரப்படுத்துவதிலும் புகழ்பெற்று விளங்கியவர் கே.டி.குஞ்சுமோன். இவர் தயாரிப்பில் உருவாகவுள்ள, ' ஜென்டில்மேன் 2 ' படத்தின் இசையமைப்பாளர் யாரென கண்டுப்பிடிப்பவர்களுக்கு தங்கக்காசு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

author img

By

Published : Jan 22, 2022, 7:08 PM IST

கே.டி. குஞ்சுமோன் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர். நடிகர் சரத்குமார் தொடங்கி, இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.

பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் அவற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டிய இவர், பல காலமாக திரைத்துறையில் ஒதுங்கி இருந்துவந்தார்.

இந்நிலையில் கே.டி. குஞ்சுமோன் தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் ஆரம்பத்தையே அதிரடியான அறிவிப்புடன் செய்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தற்போது ஜென்டில்மேன்2 படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகளை தொடங்கியுள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் எவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ரசிகர்களுக்கு இதனை ஒரு போட்டியாக அறிவித்து அசத்தியுள்ளார்.

விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் அவர் யாரென சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க:ஆர்ஆர்ஆர் திரைப்பட புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.