ETV Bharat / sitara

‘சார்பட்டா’ கபிலனுக்கு பெண் குழந்தை..!

ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு இன்று (ஜூலை 23) பெண் குழந்தை பிறந்துள்ளதால் திரைப்பிரலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Girl child for actor Arya
Girl child for actor Arya
author img

By

Published : Jul 24, 2021, 12:48 AM IST

Updated : Jul 24, 2021, 7:00 AM IST

சென்னை: நடிகர் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே மகிழ்ச்சியில் ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 2019 மார்ச் 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.

இருவரும் திருமணம் செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று (ஜூலை 23) இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து திரைபிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை சமூகவலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

  • So Happy to break this news,great to be an Uncle,my Bro Jammy & Sayyeshaa r blessed wit a #BabyGirl,uncontrollable emotions rite now in midst of shoot.Always wish de best 4 dem,Inshallah,GB de new Born,my Baby Girl @sayyeshaa & @arya_offl for taking a new responsibility as a Dad

    — Vishal (@VishalKOfficial) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குறிப்பாக சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கு முன்பு கடல் மேல் இருக்கும் போட்டில் அமர்ந்து ஆர்யாவும், துஷாரா விஜயனும் பேசுவதுபோல் காட்சி ஒன்று அமைந்திருக்கும். அப்போது, துஷாரா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், உனக்கு ஆண் குழந்தை வேண்டுமா?, பெண் குழந்தை வேண்டுமா? எனக் கேட்பார். அதற்கு நீ மட்டும் போதும் என ஆர்யா கூறுவார். அப்போ பெண் குழந்தை தான் என துஷாரா கூறுவார், அதுபோல உண்மையில் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

  • Congratulations @arya_offl and @sayyeshaa wishing you both and tthe lil Angel a lifetime of happiness ♥️ lots of love and blessing. ☺️

    — Hansika (@ihansika) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சார்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஆர்யாவின் வாழ்கையில் இரண்டுமே முக்கியமான தருணங்களாக இருக்கும்.

இதையும் படிங்க: நான் யாருன்னு எல்லோருக்கும் நிரூபிக்கிற நேரம் இது - 'சார்பட்டா' ஆர்யாவின் பஞ்ச்

Last Updated : Jul 24, 2021, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.