ETV Bharat / sitara

'ப்ளாக் பஸ்டர் மலையாள ரீமேக்கில் கம்பேக் கொடுக்கும் ஜெனிலியா?' - Latest cinema news

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் மலையாள ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை ஜெனிலியா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

genelia to star in chiranjeevi lucifer remake

author img

By

Published : May 21, 2020, 8:03 PM IST

'பாய்ஸ்', 'சச்சின்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'உத்தமபுத்திரன்' போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், நடிகை ஜெனிலியா.

இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை 2012ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தார், ஜெனிலியா.

தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இவர் சிரஞ்சீவியின் பெயரிடப்படாத 'சிரு 156' திரைப்படத்தில் கம் பேக் கொடுக்கவுள்ளாராம். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ப்ளாக் பஸ்டர் திரைப்படமான 'லூசிபர்' திரைப்படத்தின் ரீமேக் தான் 'சிரு 156'.

genelia to star in chiranjeevi lucifer remake
ஜெனிலியா

மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில், ஜெனிலியாவை நடிக்கவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... முதன்முதலாக அறிமுகமான படத்தை நினைவுகூறும் ரித்தேஷ்-ஜெனிலியா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.