ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை ஜெனிலியா. நடிகர் விஜயுடன் 'சச்சின்', 'வேலாயுதம்', ஜெயம் ரவியுடன் 'சந்தோஷ் சுப்ரமணியம்', தனுஷுடன் 'உத்தம புத்திரன்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டவர் ஜெனிலியா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெனிலியா மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் பிரபல பாலிவுட் நடிகருமான ரித்தீஷ் தேஷ்முக்கை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ரியான், ரேய்ல் என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளன.
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்த ஜெனிலியா நடிப்பில் தமிழில் கடைசியாக 'வேலாயுதம்' படம் வெளியாகியிருந்தது. அதன் பின்னர் சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தமிழில் பெரும்பாலும் சுட்டித்தனமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஜெனிலியா தற்போது முழு நேர குடும்பத் தலைவியாகவே இருந்துவருகிறார்.
-
Dearest Forever,
— Genelia Deshmukh (@geneliad) February 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Grow old along with me,
I promise the best is yet to come❤️ Happy Anniversary @riteishd Just to let you know I Love being my Husband’s wife 😍😍😍😍😍😍. #since2002❤️ pic.twitter.com/QQoR2TlaGd
">Dearest Forever,
— Genelia Deshmukh (@geneliad) February 3, 2020
Grow old along with me,
I promise the best is yet to come❤️ Happy Anniversary @riteishd Just to let you know I Love being my Husband’s wife 😍😍😍😍😍😍. #since2002❤️ pic.twitter.com/QQoR2TlaGdDearest Forever,
— Genelia Deshmukh (@geneliad) February 3, 2020
Grow old along with me,
I promise the best is yet to come❤️ Happy Anniversary @riteishd Just to let you know I Love being my Husband’s wife 😍😍😍😍😍😍. #since2002❤️ pic.twitter.com/QQoR2TlaGd
இதனிடையே இன்று எட்டாவது ஆண்டு திருமணநாளைக் கொண்டாடும் ஜெனிலியா - ரித்தீஸ் தேஷ்முக் தம்பதி காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். தங்களது வாழ்க்கைப் பயணத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான நினைவலைகளைத் திரும்பிப் பார்க்கும் புகைப்படங்களைக் காணொலியாக வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
இது குறித்த ஜெனிலியாவின் ட்விட்டர் பதிவில், ”என்றென்றும் அன்பே, என்னுடன் வயதாகிவிடு, இனிய திருமண நாள் வாழ்த்துகள். நான் என் கணவரின் மனைவியாக இருப்பதையே விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க.. முருகன் அவதாரம் எடுத்த யோகிபாபுவின் 'காக்டெய்ல்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு