ETV Bharat / sitara

திமுகவுக்கு பின்னால் இருந்து வேலை செய்ய வேண்டாம் - சூர்யாவை வம்புக்கிழுத்த காயத்ரி - gayathri raghuram accuses suriya supporting EIA

இஐஏ தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட ட்விட்டர் பதிவை எதிர்த்து நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார். அதில் சூர்யா மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக விமர்சித்துள்ளார்.

gayathri raghuram accuses suriya statement against EIA

author img

By

Published : Aug 1, 2020, 5:19 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இஐஏ வரைவுக்கு எதிராக நடிகர் கார்த்தி தனது உழவன் அறக்கட்டளை சார்பாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மக்கள் இது குறித்து சிந்திக்கவும், இஐஏ குறித்தான தங்கள் கருத்துகளை அரசிடம் எடுத்துச் சென்று இந்த வரைவை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

கார்த்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பிரச்னை குறித்து மக்கள் அமைதியாக இருக்கக்கூடாது என்றும், அமைதியாக இருப்பது பின்வரும் நாள்களில் ஆபத்தாக அமையலாம் என்றும் தெரிவித்தார். மேலும் சூற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் சூர்யா கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம், சூர்யா ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், மக்களை அவர் தவறாக வழிநடத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுகவின் பொய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். குழப்பத்தை ஏற்படுத்தும் நடிகர்கள், நேரடியாக அந்த கட்சியை ஆதரியுங்கள். பின்னால் இருந்து வேலை செய்ய வேண்டாம். நீங்கள் சொல்வது சரி என்று மக்களை நம்ப வையுங்கள். உண்மை என்னவென்று அறிந்துகொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

  • Yes we need to protect ourselves from DMK lies. And actors who create confusion. Please directly support a party expose yourself. Don’t work in back hand. Make people believe what you say is right. Enquire and know the truth. https://t.co/ivBDKmbqBt

    — Gayathri Raguramm (@gayathriraguram) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க... திமுகவுக்கு கூஜா தூக்கும் திருமாவளவன்: காயத்ரி ரகுராம் கடும் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.