ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'மைக்கேல்'. ஆக்சன் என்டர்டெய்னர் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது.
இந்நிலையில் 'மைக்கேல்' படத்தில் முன்னணி இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் (Gautam menon) வில்லனாக நடிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ரத்த கறையுடன் கைவிலங்கு மட்டும் தெரியும்படி இருக்கும் போஸ்டருடன் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவரின் தீவிர ஆதரவாளராக நடிக்கிறார்.
சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்திருப்பதால் ‘மைக்கேல்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.
இதையும் படிங்க: நீண்ட நாள் தோழியை மணந்த வலிமை வில்லன்