கரோனா நோய் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஊரடங்கைப் பின்பற்றாமல் வீட்டை விட்டு வெளியே வாகனங்களில் சுற்றிவருகின்றனர். இதனால் புளியந்தோப்பு காவல் துறையினர் கரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த பாடகர் கானா பாலாவை வைத்து பாடல் ஒன்றை எழுத வைத்து, அவரே பாடவும் வைத்துள்ளனர்.
அப்பாடலில் கரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கைப் பொதுமக்கள் பின்பற்ற வலியுறுத்தும் படியும், பாடல் வரிகள் அமைந்துள்ளன. மேலும் கானா பாலா சமீபகாலமாக திரைப்படங்களில் பாடல் பாடுவதைத் தவிர்த்து வந்த நிலையில், கரோனா குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’மது பழக்கத்தை கைவிடுங்கள்’: பார்த்திபன் வேண்டுகோள்