இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 'பிக்பாஸ்' புகழ் லோஸ்லியா நடித்து வரும் திரைப்படம், 'பிரண்ட்ஷிப்'.
ஜான் பால் ராஜ், சாம் சூர்யா ஆகியோர் இயக்கி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியானது.
அதேபோல், அப்படக்குழுவினர் வெளியிட்ட ‘அடிச்சு பறக்கவிடுமா' எனத் தொடங்கும் பாடலைத் தேவா, லோஸ்லியா ஆகியோர் பாடி சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றது.
இந்நிலையில் இப்படம் வரும் செப். 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகப் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹர்பஜன் சிங் ரசிகர்களுக்கு டிரீட் கொடுத்த பிரண்ட்ஷிப் படக்குழு