ஆஸ்கர் விருதுகளை வாரிக்குவித்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஃப்ரிடா பின்டோ. இவர் புகைப்படக் கலைஞர் கோரி ட்ரான் என்பவரை நேசித்து வந்தார். தற்போது இந்த காதல் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்தேறியுள்ளது.
முன்னதாக கோரி குறித்து ஃப்ரிடா, என் வாழ்க்கையில் வந்த மிக அழகான உயிர் என குறிப்பிட்டிருந்தார். தற்போது ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என் வாழ்க்கை, உலகம், கடந்த காலக் கண்ணீர், முன்னாள் காதலர்கள் கூறிய அறிவுரை, நான் என் பாதை உட்பட அத்தனையும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதே புகைப்படத்தை கோரி ட்ரான் பகிர்ந்து, நான் கேட்கும் மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசு நீ .. என குறிப்பிட்டுள்ளார்.
