ஒரு கால்பந்தாட்ட வீரரின் உளவியல் பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் "க்". தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் தயாரிக்கும் இந்த படத்தில் அறிமுக நடிகர் யோகேஷ், 'ஜோக்கர்' புகழ் குரு சோமசுந்தரம், அனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை பாபு தமிழ் இயக்கியுள்ளார். இவர் கடந்த ஆண்டு வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்ற ஜீவி படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.
![ikk](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-ikk-teaser-script-7205221_11122020121949_1112f_1607669389_401.jpg)
"க்" படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. உளவியல் ரீதியாக சிக்கித் தவிக்கும் ஒரு கால்பந்தாட்ட வீரரின்ப் நிலையை மிகவும் அழகாக எடுத்துள்ளதாக டீசரை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டி உள்ளனர். அவினாஷ் கவாஸ்கரின் இசையும் மிக அருமையாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.