ETV Bharat / sitara

'ரஜினி வாக்களிக்காததில் சூழ்ச்சி இல்லை' -கமல்ஹாசன் - kamalhassan

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த கமல்ஹாசன், 'ரஜினி வாக்களிக்க இயலாமல் போனது வருத்தம் அளிக்கிறது' என்று தெரிவித்தார்.

கமல்ஹாசன்
author img

By

Published : Jun 23, 2019, 3:37 PM IST

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே. சாலையில் எப்பாஸ் பள்ளியில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலில் பாண்டவர் அணியில் நாசர், விஷால், கார்த்தி ஒரு அணியாகவும், சுவாமி சங்கரதாஸ் அணியில் பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் ஆகியோர் ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றனர்.

இருமுனை போட்டியாக நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ராதா, அம்பிகா, அருண் விஜய், ரோகினி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிற நடிகர் நடிகைகளும் வாக்களித்துள்ளனர். இவர்களைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் வாக்களித்துள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒருபக்கம் பதற்றமாக இருக்கிறது. இங்கே எல்லோரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். ரஜினி வாக்களிக்க இயலாமல் போனது வருத்தமளிக்கிறது.

அது அஞ்சல் துறையின் பிழையாக இருக்கலாம். இதில் சூழ்ச்சி இருப்பதாக பார்ப்பது மிகவும் தவறு; பார்க்க வேண்டாம். அடுத்தமுறை இதுபோன்ற பிழைகள் நேராமல் தவிர்க்க வேண்டும்.

கமல்ஹாசன்

வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துகள். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம்' என்று அவர் தெரிவித்தார். இதுவரை 1,252 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிய இன்னும் மூன்று மணி நேரங்களே உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.