ETV Bharat / sitara

விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப் திருமண புகைப்படம் கசிவு! - திருமணத்திற்குப் பிறகு விக்கி கவுஷல் 0- கத்ரீனா கைஃப் முதல் படம்

பாலிவுட் நட்சத்திரங்கள் விக்கி - கத்ரீனா ஜோடிக்கு இன்று (டிசம்பர் 9) ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்ற நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன.

மாடியில் நிற்கும் நட்சத்திர ஜோடி
மாடியில் நிற்கும் நட்சத்திர ஜோடி
author img

By

Published : Dec 9, 2021, 8:06 PM IST

Updated : Dec 9, 2021, 8:37 PM IST

ஹைதராபாத்: பல மாதங்களாக நீடித்துவந்த பலரது யூகங்களுக்கு விடை கிடைக்கும் வகையில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. ஆம் பாலிவுட் ஜோடியான விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப் இன்று (டிசம்பர் 9) திருமணம் செய்துகொண்டனர்.

இந்த சுப நிகழ்ச்சி ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள ரிசார்ட்டாக மாற்றப்பட்ட கோட்டையில் நடைபெற்றது. இத்திருமணத்தில் கலந்துகொள்வோர் புகைப்படம் எடுக்கக் கூடாது, கோட்டையைச் சுற்றிப் பறக்கும் ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

மாடியில் நிற்கும் நட்சத்திர ஜோடி
மாடியில் நிற்கும் நட்சத்திர ஜோடி

இந்நிலையில் தற்போது அவர்களது திருமணத்திற்குப் பிறகு, விக்கி - கத்ரீனாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

வைரலான படங்களில், விக்கி தங்க நிற உடையிலும், கத்ரீனா சிவப்பு சப்யாசாச்சி லெஹங்காவிலும் அழகாக மிளிர்வதையும் காண முடிகிறது. பின்னர் இன்று மாலை பார்வாரா கோட்டையின் ஷீஷ் மஹால் பகுதியில் நடந்த விழாவில் இந்த நட்சத்திர ஜோடி கலந்துகொண்டது.

திருமண கோலத்தில் நிற்கும் விக்கி- கத்ரீனா

மிகப்பெரும் நட்சத்திரங்களின் திருமண காட்சிகள் எதுவும் கசிந்துவிடாதபடி அதிரடியான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், சில படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த ஜோடியானது தங்களுடைய கனவுத் திருமணத்தின் பிரத்யேகப் படங்களை, ஒரு பன்னாட்டுப் பத்திரிகையின் இந்தி பதிப்பிற்கு விற்க ஒப்புக்கொண்டதாகவும் வதந்திகள் பரவிவருகின்றன.

முன்னதாக இந்த ஜோடியானது தங்கள் திருமண ஒளிபரப்பு உரிமையை ஓடிடி தளத்திற்கு 80 கோடி ரூபாய்க்கு விற்றதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதாவது ஓடிடி தளத்தில் ஒரு நிகழ்ச்சியைப் போலவே முழு திருமண காட்சிகளையும் பார்த்து ரசிக்க முடியும்.

இதையும் படிங்க: இந்திய திரைப்பட வரிசையில் 'ஜெய்பீம்' சாதனை!

Last Updated : Dec 9, 2021, 8:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.