நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் FIR. மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், இயக்குநர் கெளதம் மேனன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து இருக்கிறார்.
இந்நிலையில் இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இத்திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், கரோனா தொற்று காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.