'வெண்ணிலா கபடி குழு' திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கு ராட்சசன் திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'காடன்', 'மோகன்தாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்து வெளியாகவுள்ளன. இந்நிலையில் விஷ்ணு விஷால் இன்று (ஜூலை17) தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதையொட்டி அவர் நடித்து வரும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் வீடியோ ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில், இர்ஃபான் அகமது என்ற பெயரில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்கள் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி - அமிதாப் பச்சன்