பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், நடிகர், பாடகர் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஃபர்ஹான் அக்தர். இவர், நடிப்பால் புகழ் பெற்றாலும் அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில், "ஹோப் வெல்ஃபர் அறக்கட்டளையுன் இணைந்து வீடற்ற குடும்பத்திற்கு நிரந்தரமான வீடு கட்டி கொடுத்துள்ளார். அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஹோப் நலன்புரி அறக்கட்டளையின் செயலாளராக இருக்கும் திவ்யான்ஷு உபாத்யாய், தனது அழைப்பை ஏற்று பிற குடும்பத்திற்கு உதவ முன்வந்த மற்றும் நடிகர் ஃபர்ஹான் அக்தருக்கு பாராட்டுக்கள் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வீடற்ற சிவ் மந்திர் பூஜாரி கூறுகையில், அழைப்பை ஏற்று முழு பொறுப்பை ஏற்று வீடு கட்டிக் கொடுத்தமைக்கு மனதார வாழ்த்துகிறேன். பல மாதங்களாக உங்கள் அர்ப்பணிப்பை கண்டு ஆச்சர்யப்படுகிறோம். இனி எங்கள் குடும்பம் பனியிலும் குளிரிலும் தூங்கும் நிலை வராது என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆயிரம் பிபிஇ கிட்களை நன்கொடையாக ஃபர்ஹான் வழங்கினார். பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு நிதி திரட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அசுரனின் அதே ஆக்ரோஷத்துடன் நடந்து வரும் 'நாரப்பா'!