கோலிவுட் ரசிகர்களுக்குப் பேய் படம் என்றாலே மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் நகைச்சுவை கலந்த பேய் படத்திற்கு ரசிகர்களின் மனதில் தனி இடம் இருக்கிறது. ரசிகர்களின் விருப்பத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட இயக்குநர் சுந்தர். சி தொடர்ந்து அரண்மனை சிரீஸ் மூலம் மக்களைக் கவர்ந்துவருகிறார்.
அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், அரண்மனை 3 படம் உருவாகியுள்ளது.
ஆர்யா ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் கரோனா பரவல் காரணமாகத் திரையரங்குகள் முடியிருந்ததால், ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்காமலிருந்தது.
இதனையடுத்து கடந்த மாதம் திரையரங்குகள் திறந்தவுடன் படத்தின் ரலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (அக்.14) வெளியாகும் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் படத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனையாகி வருகிறது. முன்னதாக படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் நல்ல வரவேற்பு பெற்றதால் படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க - அண்ணாத்த டீசர் தேதி அறிவிப்பு