சென்னை: 76 வயதான நடிகை சாரதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், மூன்று முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.
சென்னையில் வசித்து வரும் அவர் காலமாகிவிட்டதாக காலை முதல் தகவல் பரவி வருகிறது. ஆனால், இது வதந்தி என்றும் தாம் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை நம்பாதீர்கள். நான் நலமுடன் உள்ளேன். தேவையில்லாத உண்மைக்கு புறம்பான வதந்திகள் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
கே.ஆர். விஜயா, கவுண்டமணி குறித்தும் இதேபோல் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று வதந்தி பரப்புபவர்கள் மீது தகுந்த நடடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பகத் பாசில் பிறந்தநாள் - வாழ்த்திய விக்ரம் படக்குழு!