இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா தனது 40ஆவது படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த சூர்யா - முணுமுணுக்கும் கோடம்பாக்கம்