ஆனந்த் சங்கர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'எனிமி'. மினி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யாவும், விஷாலும் நடித்துள்ளனர். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
'எனிமி' படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை 24) வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள 'எனிமி' படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார்.
படத்தின் பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும், தயாரிப்பாளரும் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளார்களாம்.
![சாம் சி.எஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-enemy-music-script-7205221_23072021165921_2307f_1627039761_455.jpg)
மேலும், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நல்ல வரவேற்பைப் பெற்ற ஹாஸ்டல் டீசர்!