தனுஷ்- கௌதம் மேனனின் கூட்டணியில் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இப்படத்தின் தயாரிப்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டதால், படத்தின் வெளியீட்டில் பல நாட்களாகத் தாமதம் ஏற்பட்டு வந்தது.
'எப்பயா படத்த ரிலீஸ் பண்ணுவிங்க? ' என ரசிகர்கள் நொந்துக் கொள்ளும் அளவுக்கு படத்தின் ரிலீஸ் தேதி, தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் இறுதியாக படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பல நாட்கள் எதிர்பார்ப்பில் இருந்த 'மறு வார்த்தை பேசாதே' பாடலின் வீடியோ புரோமேவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தாமரையின் வரிகளில், சித் ஸ்ரீராமின் மென்குரலில், தர்புகா சிவாவின் இசையில் அமைந்துள்ள இந்த 20 நொடி பாடலைத் தொடர்ந்து, படம் எப்படி இருக்கப்போகிறது என்பதே ரசிகர்களின் இந்த நொடி எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ரெட்ரோ ஸ்டைலில் கங்கனா; 'தலைவி' ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!