சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் இயங்கிவருகிறது.
இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் உள்ளார். இவர், காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தயாரிப்பு நிறுவனத்தில் கணக்காளராகப் பணிப்புரிந்து வருகிறார்.

இவர், கடந்த பல வருடங்களாக வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய வரி விலக்கு தொகையை செலுத்தாமல் போலியான ஆவணங்களை தயாரித்து ஏமாற்றிவந்துள்ளார்.
மேலும், வருமான வரித் துறையின் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பாமல் ரம்யா அவரது கணவர் தியாகராஜன், சகோதரி ராதிகா, சகோதரர் ராஜேஷ் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி பணத்தை கையாடல் செய்துள்ளார்.
இந்தக் கணக்குகளை ஆராய்ந்தபோது ரூ.45 லட்சத்திற்கும் மேல் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இதனால் ரம்யா, தியாகராஜன், ராஜேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரம்யாவின் சகோதரர் ராஜேஷ், காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரம்யா தனது வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு உடனே எடுத்துவிடுவார் எனவும், அதுகுறித்து கேட்டால் நிறுவனத்தின் பணம் என மட்டுமே கூறுவார். இந்தக் கையாடலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார்.
இந்தப் புகாரில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளதால், வழக்கு மத்திய குற்றப்பிரிவ காவல்துறைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க... விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் கையாடல் புகார்!